முடிந்தால் தடுத்துக் காட்டுங்கள்; ஜனாதிபதிக்கு சவால் விடுத்த பெண் எம்.பி!
எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பை சுற்றிவளைத்து ஆக்கிரமிப்போம் என்றும் , முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை தடுத்துக் காட்டுங்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரத்ன சபையில் சவால் விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தின் புலமை சொத்து என்னவென்றால் டொலர் கறுப்பு சந்தையாகும். டொலர் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.
அதோடு எரிவாயு, எரிபொருள், பால்மாவுக்கான நீண்ட வரிசையே இந்த ஆட்சியின் அடையாளமாகும். நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், நாளாந்தம் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதுதான் இன்றைய நாட்டின் நிலைமை என்றும் அவர் குறிப்பிட்டார். ராஜபக்க்ஷவினரின் செல்லப் பிள்ளையாக ஹிருணிகா வளர்ந்தவர், அவரையே தாக்கவும் அச்சுறுத்தவும் அடியாட்களை அனுப்பியுள்ளனர்.
அத்துடன் கட்சி அலுவல்களும் தாக்கப்பட்டது. கல்விமான்கள் என கூறிக்கொண்டு மாடுகள் போன்று செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் தொடர்புபட்டுள்ளனர்.
நாம் 15 ஆம் திகதி நாம் கொழும்பை சுற்றிவளைப்போம், பெண்களை ஒன்றிணைந்து கொழும்பை ஆக்கிரமிப்போம், முடிந்தால் ஜனாதிபதி இந்த பேரணியை நிறுத்திக் காட்டுங்கள்என்றும் ரோஹினி குமாரி கவிரத்ன சவால் விடுத்தார்.