வாழ்த்து மழையில் நனையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!
முடிந்தவரை அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியதற்காக இலங்கைக்கு அவுஸ்ரேலியா பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான செயல்பாட்டில் இது வரவேற்கத்தக்க முதற் படி என அவுஸ்ரேலிய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அதேவேளை , பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை வரவேற்றிருந்தன.
அத்துடன் , தமது ஆதரவும் இலங்கைக்கு எப்போதும் இருக்கும் என தெரிவித்ததுடன் , ஜனாதிபதி ரணிலுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.