வவுனியாவிற்கு பெருமை சேர்ந்த மாணவியை பாராட்டிய அரசாங்க அதிபர்!
கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் போட்டிகளில் மாணவி கோசியா திருமேனன் 3ஆவது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார்.
இந்நிலையில், மாணவி கோசியா திருமேனனுக்கு அரசாங்க அதிபர் தனது பாராட்டினை தெரிவித்தமையுடன் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தார்.
34 வீர வீராங்கனைகள் பங்குபற்றிய கனிஷ்ட பொதுநலவாய போட்டி தொடரில் பளு தூக்கும் விளையாட்டுப் போட்டியில் இலங்கை 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.
இவற்றில் 2 வெண்கலப் பதக்கங்கள் வவுனியா மற்றும் யாழ்ப்பாண வீராங்கனைகளினால் வெல்லப்பட்டுள்ளன.
வவுனியாவை சேர்ந்த 14 வயதான கோசியா திருமேனன், 16 வயதுக்குட்பட்ட 40 கிலோ எடை பிரிவில் 92 கிலோ கிராம் எடையை தூக்கியதன் மூலம் 3 ஆவது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றெடுத்தார்.
குறித்த மாணவியை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சரத்சந்திர அவர்கள் மாவட்ட செயலகத்திற்கு வரவளைத்து தனது பாராட்டினை தெரிவித்தார்,
மேலும் சிறு அன்பளிப்பும் வழங்கி வைத்தமையுடன் மாவட்ட செயலக ஏனைய அதிகாரிகளும் தமது வாழ்த்துக்களை மாணவிக்கு தெரிவித்திருந்தனர்.