ஜனாதிபதி தேர்தல்; முக்கிய அறிவிப்பொன்றை விடுத்த மஹிந்த ராஜபக்க்ஷ!
அடுத்த வருடம் இடம்பெறாவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்து உள்ளார்.
அநுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மகா போதிக்கு ம் விஜயம் செய்த மஹிந்தவிடம், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறி உள்ளார்.
ஜனவரி முதல் தேர்தல் பிரசார நடவடிக்கை
இதேவேளை, தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடக்கவுள்ளது.
மேலும் இந்த சம்மேளனத்தின் போது, கட்சியின் முக்கிய பதவிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.