பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
பிரித்தானியாவின் 57ஆவது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுனக்கின் விரிவான அனுபவம் அவரது கடமைகளை நிறைவேற்றும் திறனுக்கு முக்கியமானதாக இருக்கும் என ஜனாதிபதி ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும்
இலங்கையும் பிரித்தானியாவும் பாரம்பரியமான கடந்த காலத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, சுனக்கின் தலைமைத்துவம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகளுடனான இங்கிலாந்தின் புதிய “பிளாட்டினம் கூட்டு” திட்டம் மற்றும் “உலகளாவிய பிரிட்டன்” கொள்கை மூலம் இந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.