5000 ரூபா நாணயத்தாளில் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்! சந்தேக நபருக்கு நேர்ந்த கதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடன் கூடிய 5000 ரூபா போலி நாணயத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரவின் உருவம் பொறித்த போலியான 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அத்துருகிரிய பகுதியில் வைத்து 38 வயதான குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேகநபர் அத்துருகிரிய, கொரதொட, மஹதெணிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.