சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றுக் கொண்டார் ஜனாதிபதி!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக முன்னர் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க சார்லஸிடம் இன்று (பெப் 07) தெரிவித்தார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.