பிரச்சாரத்துக்கு தயாராகுங்கள் ; பஸில் பணிப்புரை!
மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். அதனை எதிர்கொள்வதற்கு தயாராகுங்கள் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச பணித்துள்ளார்.
இந்த பணிப்புரையை , அனைத்து தொகுதி அமைப்பாளர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார் என்று இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.