திருமணம் செய்ய வற்புறுத்தல் ; கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகங்கள் சூட்கேஸில்
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் மற்றும் அவரது மனைவி பகபதி மாஜி ஆகியோர் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தங்களைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் இந்தக் கொலை இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தன்று குறித்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை மயக்கமடையச் செய்து, பின்னர் கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையின் பின்னர், உடலை மறைத்து அப்புறப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பின்னர் உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி, கொலைக்கான காரணம் மற்றும் உடல் பாகங்கள் ஆக்ராவிற்கு அனுப்பப்பட்டமை தொடர்பில் மேலதிக தகவல்களை காவல்துறையினர் திரட்டி வருகின்றனர்.