தமிழர் பகுதி பிரதேச சபை உப தவிசாளர் அதிரடி கைது
முல்லைத்தீவு, செம்மலை – கொக்கிளாய் வீதியில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் கொக்குளாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (15) மாலை செம்மலை – கொக்கிளாய் வீதியில் பொலிஸார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் உள்ளூராட்சி மன்றத்தின் உப தவிசாளர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களும் தற்போது கொக்குளாய் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை கொக்குளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.