நாட்டில் 25 சதவீதமான பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை
தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, நாடு முழுவதும் சுமார் 25% பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷர்லி குமார தெரிவித்துள்ளார்.
இன்று (28) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பொது முகாமையாளர், தற்போதுள்ள நிலைமையில் மின்சார விநியோகத்தை மீண்டும் சீரமைப்பது மிகவும் கடினமான பணியாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மின் விநியோகத் தடங்கலில் கிழக்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களை அண்மித்த பகுதிகள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன், 132,000 கிலோவோல்ட் (kV) திறன் கொண்ட ரந்தெனிகல, ரந்தெம்பே மற்றும் மஹியங்கனைக்கு இடையேயுள்ள மின் கம்பிகளும் முறிந்து விழுந்துள்ளதாகவும், இதைச் சீரமைக்கும் இடங்களுக்குச் சென்றடைவதில் சிரமம் உள்ளதாகவும் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.