எதிர்மறை சிந்தனை நீங்கி செழுமையான வாழ்க்கை முறைக்கான வழிமுறைகள்
வாழ்க்கைப்பாதையில் நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிப் பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு அனைவர் மத்தியிலும் நிச்சயமாக இருக்கும்.
ஆனால் எவ்வளவு பாடுபட்டு கடுமையாக உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லை. இன்னும் சிலருக்கு எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தடைகள் ஏற்படும்.
தடைகளை தாண்டி உறுதிக்கொண்டு முயற்சித்தாலும் தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும் தருவாயில் வாழ்க்கைப்பயணத்தில் மனச்சோர்வு, விரக்தி, மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
நாம் முன்செல்ல எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் முன்னேற்றத்திற்கான வழி இன்றி தொடர்ச்சியான தோல்விகளை மாத்திரம் சந்தித்துக் கொண்டிருக்கும் போது எதிர்மறை எண்ணம் சுலபமாகத் தோன்றி விட வாய்ப்புகள் உண்டு.
அத்தோடு எந்த காரியத்தையும் ஆர்வத்துடன் முன்வந்து செய்வதற்கான மனப்பான்மை இல்லாமல் போய்விடும். இந்நிலையை மாற்றியமைத்து முன்னுற்றப்பாதைக்கான வழி அமையப் பெறுவதற்கு செய்ய வேண்டிய இரண்டு எளிய பரிகாரங்கள் பற்றி நோக்குவோம்.
1.எதிர்மறை சிந்தனை நீங்குவதற்கு இதை மட்டும் செய்துப் பாருங்கள்.
வீட்டில் நல்ல சிந்தனைகள் தோன்றி எதிர்மறை சிந்தனைகள் நீங்குவதற்கு வீட்டின் மையப்பகுதியில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மஞ்சள்தூளை நிரப்பி, கோபுரம் போல் வைக்க வேண்டும்.
மஞ்சள் குருவின் அம்சம் என்பதால் வீட்டில் குருவருள் நிறைந்திருக்கும். நல்ல காரியங்கள் நடப்பதில் இருக்கும் தடைகள் விலக துவங்கி விடும். இவ்வாறு 21 நாட்களுக்கொரு முறை மஞ்சளை மாற்றி நிரப்பி வைத்து வழிபட வேண்டும்.
தொடர்ச்சியாக இப்பரிகாரத்தை மேற்கொள்ளும் போது உங்களிடையே தோன்றும் மாற்றத்தை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
2.வேலைக்கேற்ற வெகுமதி உண்டாக செய்ய வேண்டியது.
எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் அதற்கு ஏற்ற பலன், வருமானம் கிடைக்கவில்லையே என வேதனைபடுபவர்கள் ஏராளமானோர்.
அவர்கள் மண் அகலில் கடுகு எண்ணெய் ஊற்றி, இரண்டு கிராம்புகளை போட்டு, பஞ்சுத் திரி மற்றும் தாமரை தண்டினை சேர்த்து திரித்து தீபம் ஏற்றி வர வேண்டும்.
தினமும் மாலை வேளையில் 5 மணி முதல் 7 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றி, ஒரு மணி நேரமாவது எரிய விட வேண்டும். இதனால் வீட்டில் நன்மைகள் அதிகரிக்க துவங்குவதை காண முடியும்.