37 வயதில் பிரபல சின்னத்திரை நடிகை திடீர் மரணம்; சோகத்தில் ரசிகர்கள்
பிரபல கன்னட சின்னத்திரை நடிகை ரஷ்மி லீலா (37) திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ரஷ்மி லீலா , ‘தெலுங்கு ஜானகி’, ‘காவலுதாரி’, ‘காவ்யாஞ்சலி’ உள்பட பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரஷ்மி லீலாவின் கணவர் சரிக்கு மஞ்சு தொலைக்காட்சி தொடர் வசன கர்த்தாவாக உள்ளார்.

நுரையீரல் பிரச்சினை
ரஷ்மி லீலா கடந்த 2019 -ம் ஆண்டு முதல் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் சமீபத்தில் அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் திடீரென நடிகை ரஷ்மி லீலா உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நடிகை ரஷ்மி லீலாவின் மறைவுக்கு கன்னட சின்னத்திரை துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன .