வீதியில் சென்ற லொறிக்கு முன் திடீரென வந்த யானை... நபரொருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியில் பயணித்துகொண்டிருந்த லொறியை கவிழந்து, நபரொருவரை தாக்கி யானை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் இன்றையதினம் (19-06-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மின்னேரியாவில் இருந்து வாழை மற்றும் பலாக்காய்களை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தை நோக்கிப் பயணித்த லொறி ஒன்றின் எதிரில் திடீரென யானை ஒன்று வந்துள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த லொறியின் சாரதி லொறியை விட்டு இறங்கித் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, யானை லொறியை கவிழ்த்து லொறியினுள் இருந்த நபரைத் தாக்கியதில் அவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் ஹிங்குரங்கொட ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.