கொழும்பு உணவக உரிமையாளருக்கு 6ம் ஆயிரம் அபராதம்
கொழும்பு, புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு உணவக உரிமையாளருக்கு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் ரூ.60,000 அபராதம் விதித்துள்ளது.
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவை தயாரித்தல், சேமித்தல், விற்பனை செய்தல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக குறித்த உணவக உரிமையாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களை உணவு தயாரிக்க பயன்படுத்துதல், உணவு தயாரிக்கும் பகுதிகளை அசுத்தமான நிலையில் பராமரித்தல், உணவு தயாரிக்கும் பணியாளர்களுக்கான மருத்துவ பதிவுகள் இல்லாதது, உணவு தயாரிக்கும் கொள்கலன்களைத் திறந்து வைத்தல் மற்றும் கழிப்பறையைத் திறந்து வைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் தில்ஷான் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த நபருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.