பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை ; வெளியான பரபரப்பு தீர்ப்பு
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
அதோடு குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளீர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இளைஞனின் மர்ம பகுதியை சேதப்படுத்திய டீச்சர் அம்மாவுக்கு வலைவீச்சு; மூன்று பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்
பொள்ளாச்சி பாலியல் வன்புனர்வு
பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்பதோடு, அவர்கள் அழித்த ஆதாரங்கள் தொழில்நுட்ப உதவியுடன் மீட்கப்பட்டதால் குற்றம் நிரூபிக்கப்பட்டது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் சிபிஐயிடம் அச்சமின்றி சாட்சி அளித்துள்ளனர். ஒரு சாட்சியும் பிறழ்சாட்சியமாக இல்லாமல், தனித்தனியாக வாக்குமூலம் கொடுத்ததால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்புனர்வு வழக்கில் இன்று ட்வெளியான தீர்ப்பு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.