இளைஞனின் மர்ம பகுதியை சேதப்படுத்திய டீச்சர் அம்மாவுக்கு வலைவீச்சு; மூன்று பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்
இளைஞனின் அடிவயிற்றில் பல தடவைகள் எட்டி உதைத்து தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் புலமைப்பரிசில் வகுப்புகளை நடத்தும் டீச்சர் அம்மா என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோவை, கைது செய்ய மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரான அந்த பெண்ணின் தொலைபேசி செயலிழந்து உள்ளது. அவர், தன்னுடைய மகளுடன் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி உள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
டீச்சர் அம்மா ஹயேஷிகா பெர்னாண்டோ
தாக்குதல்களுக்கு உள்ளான இளைஞனின் சகோதரி, தன்னுடைய முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவிட்ட ஒரு பதிவுக்கு பழிவாங்கும் நோக்கில், அந்த இளைஞன் மீது, 'டீச்சர் அம்மா' அவருடைய கணவன், அவர்களின் நிறுவனத்தின் முகாமையாளர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது விசாரணைகள் ஊடாக கண்டறிப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் ஹயேஷிகா பெர்னாண்டோ என்பவரின் கணவர் மற்றும் முகாமையாளர் கட்டான பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், புதன்கிழமை (14) வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் கட்டளையின் அடிப்படையில் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தாக்குதல்களுக்கு இலக்கான இளைஞன், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதியிடம் சில்மிசம்
ஹயேஷிகா பெர்னாண்டோ, தன்னுடைய நிறுவனத்தில் கடமையாற்றும் யுவதிக்கு, கணினியை பயன்படுத்தும் முறைமை தொடர்பாக கற்பிக்குமாறு, அந்த இளைஞனிடம் கேட்டுள்ளார்.
அப்போது இளைஞனால் யுவதி, துன்புறுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில், ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவன், முகாமையாளர் மற்றும் யுவதி ஆகியோர் கட்டான பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கு இரு தரப்பினரின் முறைப்பாடுகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, ஹயேஷிகா பெர்னாண்டோ, அவருடைய கணவன், முகாமையாளரினால் அவ்விளைஞன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என பொலிஸ் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், ஹயேஷிகா பெர்னாண்டோவின் கணவன், முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹயேஷிகா பெர்னாண்டோவை கைது செய்வதற்கு அவருடைய வீட்டுக்குச் சென்றபோது, தன்னுடைய மகளுடன் அவர், பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் தலைமறைவான ரீச்சரை பொ்லிஸார் வலைவீசி தேடிவருகின்றனர்.