களவாடிய பணத்தில் களைகட்டிய காதலர் தினம் ; வசமாக பிடிபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை
வீடுகளை உடைத்து தங்க நகைகளைத் திருடி காதலர் தினம் கொண்டாடிய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கம்பஹா கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், பல அடகு நிலையங்களில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

போதைப்பொருளுக்கு அடிமை
கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்துத் கொள்ளையிட்ட குறித்த நபர் நகைகளை அடகு வைத்து, அதிலிருந்து கிடைத்த பெரும் தொகை ரூபாவைச் செலவு செய்து, பெப்ரவரி 14 ஆம் திகதி தனது மனைவியுடன் மிக காதலர் தினத்தைக் கொண்டாடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் நிட்டம்புவ பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்பதுடன் , 'ஐஸ்' போதைப்பொருளுக்குத் அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
தனது தினசரி போதைப்பொருள் தேவைக்கான பணத்தை திரட்டுவதற்காகவே நிட்டம்புவ மற்றும் அத்தனகல்ல பகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் ஏற்கனவே 08 திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு உதவிய மற்றுமொரு நபரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.