கார் சாரதியை செருப்பால் அடித்த அரசியல்வாதி மகள்
இந்தியாவின் அசாம் மாநில முன்னாள் முதல்வர் பிரபுல்ல குமார் மஹந்தாவின் மகள் காஷ்யப், தனது கார் சாரதியை செருப்பால் அடித்த காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார் சாரதி மண்டியிட்டு அமர்ந்துள்ளபோது அவரை காஷ்யப், கடுமையாக திட்டி செருப்பால் அடிக்கிறார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் அதிக பாதுகாப்பு நிறைந்த எம்.எல்.ஏ .ஹோஸ்டலில் நடந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பேசிய முன்னாள் முதல்வரின் மகள்,
"எனது சாரதி தினமும் குடித்துவிட்டு வந்து என்னை பற்றி தவறாக பேசி வந்தான். நாங்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. இப்போது குடித்துவிட்டு என் வீட்டுக் கதவை தட்டினான்" என்று தெரிவித்தார்.
Shocking visuals emerge allegedly, showing former #Assam CM @PrafullaKumarMahanta’s daughter allegedly assaulting a staff member with a chappal. Such behavior is unacceptable and must be condemned. Authorities should take swift action! #Assam #viralvideo pic.twitter.com/P2kg75Va7i
— Afrida Hussain (@afridahussai) March 3, 2025