கறுப்பு சந்தையில் சிக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி - இலங்கையில் நடப்பது என்ன....!
நாட்டின் பல பகுதிகளில் சில குழுக்கள் இரகசியமாக பெற்றோல் மற்றும் டீசலை 1000 முதல் 1200 ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அவசர பயணத்திற்கு எரிபொருள் இல்லாத காரணத்தினால் நேற்று கறுப்பு சந்தையில் 5 லீற்றர் பெற்றோலை லீற்றருக்கு 950 ரூபா என்ற விலையில் கொள்வனவு செய்ய நேரிட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கறுப்பு சந்தையில் பெட்டோல்
சில குழுக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பி பின்னர் குழாய்களைப் பயன்படுத்தி அவற்றை அகற்றி போத்தல்களில் அடைத்து விற்பனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் தினந்தோறும் இந்த மோசடியில் வருமானத்தை ஈட்டி வருவதாகவும், சில பெட்ரோல் நிலைய ஊழியர்களும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடும் கோபத்தில் மக்கள்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அவசர பயணங்களை மேற்கொள்ள மிகவும் சிரமப்படும் நிலையில் கறுப்பு சந்தையில் எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக எரிபொருள் பாவனையாளர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.
இவ்வாறான சட்டவிரோத எரிபொருள் நிரப்பு நிலையங்களை சுற்றிவளைப்பதாக அரசாங்கம் கூறினாலும் அது வெற்றிகரமாக இயங்குவதாக தெரியவில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
You My Like This Video