பிக்பாஸ் தமிழ் 9 ; ஆரம்பத்திலேயே பிரவீன் காந்தியையே ஓடவிட்ட Watermelon Diwakar
தொலைக்காட்சி ரசிகர்களிற்கு மிகவும் பிடித்தமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் நேற்று (6) தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ள போட்டியாளர்களின் பட்டியல் பார்வையாளர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். நேற்று தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வீட்டிற்குள் நுழைந்தார்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர்
இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதை தொடர்ந்து அரோரா சின்க்ளேர், பிரவீன் காந்தி என ஒவ்வொரு போட்டியாளராக வரவர சமூக வலைதளங்களில் அவர்கள் பற்றிய பதிவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
உள்ளே சென்றதுமே முதல் வேலையாக திவாகர் தனது நடிப்பு திறமையை கேமரா முன்னால் காட்டத் தொடங்கியது பலரையும் சிரிப்பில் ஆழ்த்தியது.
#Day1 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 6, 2025
Bigg Boss Tamil Season 9 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/YVmjwdoLnI
பிக் பாஸ் 9 வீட்டிற்குள் சென்றதுமே தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர். இந்நிலையில் அவரால் பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைக்கிறார்கள் சக போட்டியாளர்கள்.
ஒரு நாள் கூத்து. இவரிடம் ஒரு நாளுக்கான சரக்கு தான் இருக்கிறது. இதுக்கு மேல் இவர் இந்த ஷோவில் தாங்க மாட்டார்.
பண்றதுக்கு எதுவுமே இல்லை என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அப்சரா சி.ஜே. மற்றும் வியானாவுக்கு ஒரு நாள் கூத்து ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டது.
அதே சமயம் பிரவீன் ராஜோ திவாகர் இந்த வீட்டில் தங்க அவரிடம் சரக்கு இல்லை எந்று சொல்லி ஒரு நாள் கூத்து ஸ்டிக்கரை அவருக்கு கொடுத்தார்.