நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு
மாத்தறை - திக்வெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் நேற்றைய தினம் பாடசாலையில் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது கிரிக்கெட் பந்து நீச்சல் தடாகத்தில் விழுந்துள்ளது.
பாடசாலை நீச்சல் தடாகத்தில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.