மலையக சாரதிகளுக்கு பொலிஸ்கார் விடுத்த எச்சரிக்கை
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு கடும் மழை பெய்து வருகிறது.
ஹட்டன், கொழும்பு மற்றும் ஹட்டன், நுவரெலியா பிரதான வீதிகளில் மழையுடன் அடிக்கடி பனி மூட்டமும் நிலவி வருவதானால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்ககளது வாகனங்களை தமக்குரிய பக்கத்தில் செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
நீர் போசன பிரதேசங்களில் பதிவாகிவரும் அதிக மழை காரணமாக மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, காசல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் நீர் மட்டமும் மிக சடுதியாக உயர்ந்து வருகின்றன. இதனால் நீர்த்தேக்கங்களுக்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
நீரேந்தும் பிரதேசங்களில் பெய்த அதிக மழை காரணமாக நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன. என எனவே இந்த பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளன.
மலையகத்தில் பெய்து வரும் அடைமழைக்கு மத்தியிலும் பெரும் தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தேயிலை தொழில் ஈடுப்பட்டு வருவதனை காணக்கூடியதாக இருந்தன.
சில தோட்டங்களில் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக தொழிலாளர்களின் வருகை மிக குறைவாக காணப்படுவதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் பெரும்பாலான தோட்டங்களில் தேயிலை உற்பத்தியும் வீழ்ச்சி கண்டுள்ளன.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-