காணொளியால் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்
பொலிஸ் அதிகாரி நபர் ஒருவரை தாக்கும் காணொளி தொடர்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரியொருவர் மற்றும் ஒரு நபருக்கிடையில் சனிக்கிழமை (24) அன்று ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு பொலிஸ் அதிகாரியால் குறித்த நபர் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும், காணொளி
கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இப்பாகமுவ - மடகல்லே வீதியில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற ஆண் மற்றும் பெண் ஒருவரை சோதனையிட சென்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கோகரெல்ல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் மாவட்ட 1 பொலிஸ் அதிகாரி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.