செவ்வந்தியால் பெருமளவு போதைப்பொருளுடன் சிக்கிய பெண் ; விசாரணைகள் ஆரம்பம்
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடையதாக தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா செவ்வந்தி என்ற பெண் அனுராதபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இச் சோதனை நடவடிக்கையின் போது அவரைப் போன்றே இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து பெருமளவு போதைப்பொருளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
திட்டமிட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான இஷார செவ்வந்தியை கைது செய்ய வழிவகுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு 1.2 மில்லியன் ரூபாய் பரிசு வழங்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தகவல்களை வழங்கக்கூடிய தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. தகவல்களை வழங்குபவர்களின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.