இவர்களை தெரியுமா; மூவரை பிடிக்க பொதுமக்களின் உதவி கோரும் பொலிஸார்!
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய மூவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
சந்தேக நபர்கள் மூவரும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி தற்போது தலைமறைவாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிமாலி செவ்வந்தி ராஜபக்ஷ பத்திரன, தாரிந்து ஜீவந்த ராஜபக்ஷ பத்திரன மற்றும் விராஜ் நிமாஷ்க பத்தேகம பத்திரன என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தையோ அல்லது மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரையோ 071 859 2167 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.