சடலம் ஒன்றை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை
சீதுவை - தெம்பல பகுதியில் மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (21) பதிவாகியுள்ள நிலையில் உயிரிழந்தவரை அடையாளம் காண உதவுமாறு பொதும்மகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்காததால் சடலத்தை அடையாளம்காண பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 05 அடி 07 அங்குல உயரமுடையவர் எனவும், குட்டையான தலைமுடி மற்றும் கருப்பு நிறத்தில் வெட்டப்பட்ட டெனிம் காற்சட்டை அணிந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.