புகைப்படம் வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பொலிஸார் , கடந்த 6 நாட்களாக காணாமல் போயுள்ள தந்தை ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவர் கடந்த 04 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக மகள் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.
சம்பவத்தில் 69 வயதான மாணிக்கம் துரைசிங்கம் ரொபின்ஸன் என்பவரே காணாமல்போயுள்ளார். இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள தந்தையின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
புகைப்படத்தில் உள்ள தந்தை தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தின் 071 - 8591571 அல்லது 011 - 2431861 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.