முப்படையினரின் விடுமுறைகள் இரத்து ; வெளியான முக்கிய தகவல்
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனர்த்த நிலைமை
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ஒரு அதிகாரி தாம் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலையத்திற்கு கடமைக்காக சமூகமளிக்க முடியாவிட்டால், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு சேவைக்காக சமூகமளிக்கமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஏற்கனவே 20,500 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று மட்டும், சுமார் 3,790 பேரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான மையங்களுக்கு கொண்டு வந்துள்ளனர்.
அவசரகால சூழ்நிலைகளுக்கான ஹாட்லைன் எண்கள் 117,119,
சுவசெரிய சேவை 1990
தீயணைப்புத் துறை 110
இராணுவத் தலைமையகம் 113
விமானப்படை தலைமையகம் 116