பெண்ணை அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர்; நேர்ந்த கதி
கொழும்பு பிலியந்தலையிலுள்ள விடுதியொன்றில் பெண் ஒருவரை இரு நாட்களாக அடைத்து வைத்து கொடூரமாக தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற கடமையில் இணைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் 119 அவசர இலக்கத்திற்கு அளித்த முறைப்பாட்டையடுத்து, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதான பொலிஸ் உத்தியோகத்தர் திருமணமாகாதவர் என்றும் தாக்கப்பட்ட பெண் திருமணமானவர் எனவும் கூறிய பொலிஸார், இருவரும் அறிமுகமான பின்னர் பிலியந்தல பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் கைதான சந்தேகநபர் அந்த பெண்ணுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்துள்ளார். இதன்போது அந்த பெண்ணை கழிப்பறைக்கு செல்லவும் அனுமதிக்கவில்லையென்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ப்[ஒலிஸ் உத்தியோகத்தரால் கடுமையாக தாக்கப்பட்ட பெண்ணின் மூக்கு மற்றும் உடலின் பல பாகங்களில் பலத்த காயமடைந்ததாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.