கடற்கரையில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற இளம் பொலிஸ் அதிகாரி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களுத்துறை கட்டுகுருந்த கடற்கரையில் நீராடச் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறை நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் தண்ணீரில் மூழ்கியபோது, அவருடன் இருந்த மற்ற நண்பர்கள் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.
பின்னர், அப்பகுதி மக்கள் வந்து கான்ஸ்டபிளை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெற்கு களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.