முக்கிய தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்: தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரி!
முல்லைத்தீவில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் இன்றைய தினம் (10-02-2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் முல்லைத்தீவு விளையாட்டு மைதானத்திற்கு பின்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கென புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் கட்டட வளாகத்திலுள்ள குளியல் அறையில் தூக்கில் தாெங்கிய நிலையில் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அம்பாறையை சேர்ந்த 35 வயதான இராமநாதன் சத்தியநாதன் எனும் பொலிஸ் அதிகாரி இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸாரின் மரணத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியபடாத நிலையில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.