இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி!
இளைஞன் ஒருவரை பொலிஸார் அதிகாரி ஒருவர் தாக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளத்திளத்தில் காணொளியாக வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்தது. இந்நிலையில் சமந்தப்பட்ட சப்ரகமுவ சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் இடமாற்றப்பட்டுள்ளார்.
மேலும் இச்சம்பவமானது நேற்று (25) பிற்பகல் இரத்தினபுரி, கிரியெல்ல வீதியின் கோர்க்கஎல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
அவர் ரன்மல் கொடிதுவக்கு வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குறித்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் தவறான நடத்தை தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இன்று முற்பகல் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டிருந்தது.