ஜனாதிபதி, அரசாங்கம் குறித்து அவதூறு பதிவுகள் ; காவல்துறை அதிகாரி கைது
ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவமதிக்கும் வகையிலான பேஸ்புக் பதிவுகளை வெளியிட்டதாகவும், சமூக ஊடகங்களில் அதுபோன்ற உள்ளடக்கங்களில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்ட நேரத்தில் சந்தேக நபர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள உதவி சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.
சந்தேக நபர் இதற்கு முன்னர் பல ஆண்டுகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் படையில் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தண்டனைச் சட்டத்தின் விதிகளின் கீழ் சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.