நல்லூர் கந்தன் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் அவதானம்; பொலிஸாரின் அறிவிப்பு
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சப பெருவிழாவானது கோலால்கலமாக இடம்பெற்ருக்கொண்டிருக்குன்றது.
இந்நிலையில் நல்லூர் திருவிழாவில் நகைகளை திருடுவதற்கு இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் நாலூர் செல்லும் பக்தர்களுக்கு அறிவிறுத்தியுள்ளனர்.
பக்தர்கள் அவதானம்
எனவே நல்லூர் கந்தனை தரிசிக்க ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்லுமாறு யாழ்ப்பாண பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆலய சூழலில் திருடர்களின் நடமாட்டம் காணப்படுவதால், ஆலயத்திற்கு தங்க நகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறும், தாம் அணிந்துள்ள தங்க நகைகளில் கவனம் செலுத்துமாறும் பொலிஸார் பக்தர்களிடம் கோரியுள்ளனர்.
அத்துடன், பொலிஸ் சீருடை மற்றும் சிவில் உடைகளில் பொலிஸார் ஆலய சூழல்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும், அருகில் உள்ளவர்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்தால், பொலிஸாருக்கு உடன் அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதேவேளை ஆலய சூழல்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
