கோலாகலமாக இடம்பெற்ற குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் தேர் திருவிழா!
சைவமும் தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாண குடாநாட்டில் , புண்ணிய பூமியாம் குப்பிளான் கிராமத்தில் அருளாட்சி வழங்கிகொண்டிருக்கும் கற்கரை கற்பக விநாயகர் வருடாந்த மகோற்சப பெருவிழாவின் தேர் திருவிழா இன்று (8) இடம்பெற்றது.
குப்பிளான் மண்ணின் பெருமையை கூறும் ஆலயங்களுள் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் முதன்மை வாய்ந்தது.
கற்பக விநாயகர் அருளை பெற குவிந்த பக்தர்கள்
கிராமத்தின் அழகையும், மக்களின் வாழ்வியலையும் காத்து நிற்கின்ற கற்பக விநாயகரின் மகோற்சப பெருவிழாவின் 9 ஆம் நாளான தேர்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
தேர் திருவிழாவை தொடர்ந்து நாளைய தினம் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
தேர்த்திருவிழாவில் அடியவர்கள் காவடி எடுத்தும், கற்பூர சட்டிகளை ஏந்தியும் அங்கப்பிரதட்சினம் செய்தும் தங்கள் நேர்திக் கடன்களை ஆலயத்தில் நிறைவேற்றினர்.
அதேவேளை இம்முறையும் கற்பக பிள்ளையாரின் அருளைப்பெற, புலம்பெயர் குப்பிளான் மக்களும் பல்வேறு நாடுகளில் இருந்தும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


