காலிமுகத்திடல் மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை
இலங்கை காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வெளியேறுமாறு பொலிஸ் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாலும், பொது இடங்களில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாலும் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததையடுத்து, அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸாருடன் இராணுவமும் களமிறக்கப்பட்டது.
இந்தநிலையில், அமைதியை நிலைநாட்டும் வகையில் போராட்டக்காரர்களை காலி இடத்தை விட்டு வெளியேறுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர். பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசு சார்பு செயற்பாட்டாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் பொதுச் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.
கொழும்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பஸ்கள், ஜீப்கள் மற்றும் ஏனைய வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.