யாழில் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சிக்கினர்!
யாழ்ப்பாண பொலிஸாரால் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ் நகரில் உள்ள மதுபானசாலை ஒன்றினை உடைத்து திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
அதன் பின் கடை ஒன்றின் கூரை பிரித்து 3 இலட்சம் பணம், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான சிகரெட் என்பனவற்றை திருடியதாக யாழ்ப்பாண பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலமையிலான குழு, நேற்றையதினம் மேலும் ஒரு கடை உடைப்பதற்காக சுத்தியல், சாவிகளுடன் பை ஒன்றை கொண்டு சென்ற சந்தேகநபரை கைது செய்தது.
அவரை விசாரித்தபோது ஏனைய திருட்டு சம்பவங்கள் மேற்கொண்டமை தொடர்பில் தெரியவந்துள்ளது.
63 வயதுடைய சந்தேகநபரை கைது செய்து விசாரணை இடம்பெறுவதுடன் நாளைய தினம் (20-08-2023) நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.