தமிழர் பகுதியில் பொலிஸார் காட்டிய அதிரடி ; அதி சொகுசு காருக்குள் காத்திருந்த அதிர்ச்சி
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியான இஸ்மாயில் புரம் பகுதியில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட அதி சொகுசு கார் ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பயணித்த மூவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைதாகிய சம்பவம் சம்மாந்துறை பகுதியில் நேற்று (15) மதியம் இடம்பெற்றுள்ளது.
40 ,21 ,28 ,வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனை
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழு ஒன்று களவாடிய மோட்டார் சைக்கிளை ஈடு வைத்து அம்பாறை நகர் பகுதியில் வாகனம் வாடகைக்கு விடுகின்ற நிறுவனம் ஒன்றில் அதி சொகுசு கார் ஒன்றினை பெற்று அந்த கார் மூலம் ஐஸ் போதைப்பொருள் கடத்தல் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பின்னர் குறித்த காரில் சம்மாந்தறை பிரதேசத்திற்கு வந்த சுமார் 8 பேர் கொண்ட குழு ஒன்று இரவு முழுவதும் போதைப்பொருள் பாவித்து வாடகை காரில் வழமைக்கு மாறாக அங்கம் இங்கும் ஓடி நடமாடி வந்துள்ளனர்.
இந் நிலையில் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையினால் 3 பேர் கைதாகியுள்ளதுடன் ஏனைய 5 சந்தேக நபர்களும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையாடி கிராமம், வளத்தாப்பிட்டி , இஸ்மாயில் புரம், பகுதியை சேர்ந்த மூன்று சந்தேக நபர்கள் இதன் போது கைது செய்யப்பட்டதுடன் சந்தேக நபர்கள் பயணம் செய்த அதி சொகுசு காரில் இருந்து ஹெரொயின் போதைப்பொருள் மற்றும் கைத்தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட சான்றுப் பொருட்கள் யாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.