மீட்புபணியில் கிடைத்த பல இலட்சம் பெறுமதியான நகை, பணத்தை ஒப்படைத்த இராணுவ வீரர்கள்
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளின்போது, இராணுவ வீரர்கள் இடிபாடுகளுக்குள் இருந்து கண்டுபிடித்த ரூபாய் 300,000 ரொக்கப் பணம் மற்றும் சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உரிய உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஹங்குராங்கெத்த பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டு அனர்த்த நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள், தொடர்ச்சியாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இந்த பெறுமதியான பொருட்களைக் கண்டுபிடித்தனர்.

மண்சரிவு காரணமாக முழுமையாக அழிந்துபோன ஒரு வீட்டின் இடிபாடுகளுக்குள் இருந்தே இந்த பொருட்களும் பணமும் கண்டுபிடிக்கப்பட்டன.
கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் 2025 டிசம்பர் 14 ஆம் திகதி அன்று உரிய உரிமையாளரிடம் இராணுவத்தினரால் முறையாகவும் பாதுகாப்பாகவும் ஒப்படைக்கப்பட்டது.