யாழ் கீரிமலை பகுதியில் விசமிகள் செயல்
யாழ்ப்பாணம் பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து காங்கேசன்துறை நோக்கி செல்லும் வீதியில், கீரிமலை இந்து மயானத்தை அண்மித்த பகுதியில் வெள்ள வாய்க்காலுக்கு மேல் மூடப்பட்டிருந்த சீமெந்தினால் ஆனா மூடிகளை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு அடையாளம் தெரியாதவர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
குறித்த சீமெந்து மூடிகளின் இரும்பு கம்பிகளை திருடும் நோக்குடன் அவை அடித்து நொறுக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அடித்து நொறுக்கப்பட்ட சீமெந்து மூடிகளின் இடிபாடுகள் வாய்க்காலுக்குள் காணப்படுவதானல், மழை காலத்தில் வெள்ளம் வடிந்தோட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
அதனால் அவற்றினை அகற்றுமாறும் , மேலும் ஏனைய மூடிகளை உடைக்காது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.