ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுக் கட்சி தீர்மானமா? இரகசிய பேச்சுவார்த்தை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரியவருகின்றது.
குறிப்பாக பரந்துபட்ட கூட்டணியின் கீழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறும் என பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. மே மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அந்த தகவல்களில் கூறப்பட்டன.
இந்த தகவல்களுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பதிலளிக்கையில்,

நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டால் எவ்வாறு சர்வதேச நாணய நிதியத்துடனான நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது என கேள்வியெழுப்பியிருந்தனர்.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலும் ஒக்டோபர் 5ஆம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.