எம்மை பிரிக்க சதி; பதறும் பங்காளிக் கட்சி!
அரச பங்காளிக்கட்சிகளின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றதாக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
” அரசில் உள்ள 11 பங்காளிக்கட்சிகளும் இணைந்தே செயற்பட்டன. இனியும் அவ்வாறே செயற்படுவோம். இதில் தடையேதும் இல்லை.
விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் எமது கவலையை ஜனாதிபதியிடம் வெளிப்படுத்தினோம். அதற்கு தமது தரப்பு நியாயத்தை ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
இந்நிலையில் 11 கட்சிகளில் இருந்து சுதந்திரக்கட்சி வெளியேறிவிடும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் நினைப்பது நடக்காது என தெரிவித்த சாந்த பண்டார , பங்காளிக்கட்கிகளின் பயணம் தொடரும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.