பிளீஸ்.... இதை மட்டும் செய்யுங்கள்; தன் மக்களுக்காக கையேந்தும் உக்ரைன் அதிபர்!
உகரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), தன் மக்களௌக்காக இங்கிலாந்திடம் உதவி கோரியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து இன்று 14 ஆவது நாளாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் உக்ரைன் படைகளுக்கும், ரஷியாவின் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த போரில் ரஷிய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர்,. பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) காணொளி இணைப்பு மூலம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் (Boris Johnson) உதவி கோரியுள்ளார். அதில்,
மேற்கத்திய நாடுகளின் உதவிக்காக நாங்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம். இந்த உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், ரஷியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து, அந்த நாட்டை பயங்கரவாத நாடாக அங்கீகரிக்கரிக்குமாறும் அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அதேவேளை ரஷ்யாவின் கொரூரமான தாக்குதல்களினால் உக்ரைன் பேரிழப்புக்க்களை சந்தித்துவரும் நிலையில் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடி செல்கின்றமை குறிப்பிட்த்தக்கது.