கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது நடு மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரருக்கு நேர்ந்த கதி
பேருவளை, சீனன்கோட்டை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பழைய மாணவர்களுக்கிடையில் நடைபெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியின் போது, வீரர் ஒருவர் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழைய மாணவர்களிடையேயான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் நேற்று (05) நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவர் திடீரென ஆடுகளத்தின் நடுவே மயங்கி சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை பேருவளை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்னரே அவர் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
திடீர் மாரடைப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.