நடுவானில் குலுங்கிய விமானம் ; மேற்கூரை பேனல்கள் உடைந்ததால் அலறிய பயணிகள்!
ஈரானில் நடுவானில் பறந்துகொண்டிருந்த போயிங் 737 ரக பயணிகள் விமானம் பயங்கரமாகக் குலுங்கியதில், அதன் மேற்கூரை பேனல்கள் உடைந்து பயணிகள் மீது விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மஷாத் நகரிலிருந்து கெர்மான்ஷா நோக்கிப் புறப்பட்ட ‘செபெஹ்ரான் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் விமானத்தில், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கும் சக்கரப் பகுதி மற்றும் என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

என்ஜினில் தொழில்நுட்பக் கோளாறு
இதனால் விமானம் மிகக் கடுமையாக அதிரத் தொடங்கியதில், பயணிகளின் பைகள் வைக்கும் அறைகள் திறந்து உடைமைகள் சிதறி விழுந்ததால் பயணிகள் அச்சத்தில் அலறிய காணொளி சமூக வலைத்தளங்க்களில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து , விமானிகள் சாதுரியமாகச் செயல்பட்டு விமானத்தை மீண்டும் மஷாத் விமான நிலையத்திலேயே அவசரத் தரையிறக்கம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
WATCH: Cabin ceiling falls apart onboard a Sepehran Airlines Boeing 737 after a tire reportedly burst shortly after takeoff from Mashhad Airport causing engine damage and severe vibrations. https://t.co/R7RP1AwZYX
— Breaking Aviation News & Videos (@aviationbrk) September 15, 2026
அதேவேளை சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானில் புதிய விமானங்களையோ உதிரிப் பாகங்களையோ வாங்க முடியாததால், அந்நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் முடங்கிக் கிடப்பதோடு, சுமார் 32 ஆண்டுகள் பழமையான விமானங்களே அங்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.