தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜர்
இஸ்லாம் மதம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்து, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்து
விசாரணைகளின் பின்னர், குறித்த வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்லாம் மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியாகாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த்திருந்தது.
அதன் பின்னர் தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் இன்று மேல் நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.