விமானத்தில் விசமிகளா? ருமேஷ் தரங்கவின் 5 ஈட்டிகள் சேதம்
தற்போதைய உலக தடகள களத்தில் ஈட்டி எறிதல் பிரிவில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ள இலங்கையின் தடகள வீரர் ருமேஷ் தரங்க இன்று (15) காலை நாட்டை வந்தடைந்தார்.
அங்கு, அவர் கொண்டுவந்த 5 ஈட்டிகள் விமான மூலம் கொண்டுவரப்பட்டபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி ஏர்லைன்ஸ் விமானம்
ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்த ஈட்டி, சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிந்த ஈட்டி உட்பட அவர் பயன்படுத்திய 5 ஈட்டிகளுமே சேதமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்டிமேட் மற்றும் டைமண்ட் லீக் ஆகிய இரண்டு செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5:10 மணிக்கு துருக்கிய ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான TK-730 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.
சேதமாக்கப்பட்ட அவற்றின் மதிப்பு ரூ. 2 மில்லியனுக்கும் அதிகம் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அவர் தற்போது வானூர்தி நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.