மனநலத் தகுதி இல்லை ; வழக்கிலிருந்து டெய்சி ஆச்சி விடுவிப்பு
சட்ட நடவடிக்கைகளில் பங்கேற்கும் அளவுக்கு மனநலத் தகுதி இல்லை என கொழும்பு தடயவியல் மருத்துவ சபை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பணச்சலவை வழக்கிலிருந்து டெய்சி பொரஸ்ட்டை விடுவிக்க மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

98 வயதான டெய்சி பொரஸ்ட் தீவிர டிமென்ஷியா நோய்
யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சி பொரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Money Laundering Act) கீழ் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
சட்டவிரோதமான முறையில் சுமார் 59 மில்லியன் முதல் 73 மில்லியன் ரூபா வரையிலான சொத்துக்கள் மற்றும் நிலையான வைப்பு கணக்குகளை வைத்திருந்ததாக மீது குற்றம் சாட்டப்பட்டது.
சுமார் 98 வயதான டெய்சி பொரஸ்ட் தீவிர டிமென்ஷியா (ஞாபக மறதி நோய் மற்றும் அல்சைமர்) பாதிப்புக்குள்ளாகியிருந்தார். இதனால் அவர் நீதிமன்ற விசாரணைகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்தின.
இதனை பரிசீலித்த கொழும்பு உயர் நீதிமன்றம், நவம்பர் 3, 2026 அன்று அவரை இந்த பணமோசடி வழக்கில் இருந்து முழுமையாக விடுதலை செய்து உத்தரவிட்டது