31 பால் பண்ணைகளை இந்தியாவிற்கு விற்பனை செய்ய திட்டம்!
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான 31 பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்படி ஹைலண்ட், மில்கோ உள்ளிட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்கு சொந்தமான 31 பால் பண்ணைகளை இந்தியாவில் அமுலுக்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதுவரை 21 பால் பண்ணைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், மில்கோ நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் , குறித்த நிறுவனத்தை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.